நேத்து பாமாவின் சிறுகதை மொளகாப்பொடி நாடகமாக்கத்தை (ஸ்ரீஜித் இயக்கத்தில்) பார்க்க போயிருந்தோம். நாடகத்திக்கின் துவக்கத்தில் ஜீவா ரகுனாத்தின் அறிமுகத்தில் தொடங்கி கடைசி வரி வரை ரசிக்கும்படியாக துளிக்கூட பார்வையாளர்கள் கவனம் குறையாத அளவிற்கு நாடகம் சுவாரசியமாயிருந்தது.
எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தார்கள் அதிலும் சில கதாபாத்திரங்கள் மனதை விட்டு அகலாத வகையில் இருந்தன. குறிப்பாக கங்கம்மா பச்சையம்மா இரண்டு பேரின் எதிர் எதிர் பாத்திரப்படைப்பு மிகவும் சிறப்பாயிருந்தது. பச்சையம்மாவாக நடித்த லிவிங்க் ஸ்மைல் வித்யா அந்த பாத்திரமாகவே மாறிவிட்டார் என்று தான் நிசமாகவே சொல்ல வேண்டும்.
கங்கம்மாவாக நடித்த ரம்யாவும் சிறப்பாக நடித்தார். நாடகத்தில் நடித்திருந்த பல நடிகர்கள் இதற்கு முன்னே மேடையேறியதில்லை என்று தெரிய வந்த போது ஆச்சரியமாயிருந்தது. அந்த அளவிற்கு எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள்.
நாடகத்திற்கு வந்திருந்த சில நண்பர்களுடன் பேச முடிந்தது, மற்ற சிலரை பார்க்கக்கூட முடியாத அளவுக்கு கூட்டம். அப்படி எல்லாரோடும் பேச கிடைத்திருந்தால் நேற்று மாலை இன்னும் கூட சிறப்பாயிருந்திருக்கும்...
No comments:
Post a Comment
You can leave your comments or simply sign here.