21 May 2010

பானுபாரதியின் - பிறத்தியாள் - கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா

நேற்று மாலை இலங்கை கவிஞர் பானுபாரதி அவர்களின் “பிறத்தியாள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. கறுப்பு பிரதிகளின் புது வெளியீடு...
கவிதைகளை பற்றி கவின் மலர், யாழினி முனுசாமி, சுகுணா திவாகர், வ கீதா, மற்றும் பிரபஞ்சன் கருத்துக்களை வழங்கினர்.

இதில் மிகச்சிறப்பாக இருந்தது கீதா அவர்களின் பேச்சுதான். பொதுவாக ஸ்ரீலங்காவை பற்றி அவருக்கு தெரிந்த விஷயங்களையும், இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் அறிவையும் வைத்துக்கொண்டே ஒரு மணி நேரம் மேடை பேச்சை நிகழ்த்தியிருக்க முடிந்தும் அவர் அப்படி செய்யாமல் இந்த பேச்சிற்காக செலவிட்ட சில நாழிகைகள் அவருடைய பேச்சில் தெளிவாக தெரிந்தது.

கூட்டங்களிலே யார் எதை பேசலாம், தன்னை தானே எப்படி அடையாளம் காண்பிக்கலாம் என்றெல்லாமே பேசி பேசி சண்டையில் முடியும் விழாக்களுக்கு நடுவில் கீதாவின் பேச்சு கவிதை வாசிப்பின் பல கோணங்களை முன்னிறுத்தி கூட்டததிற்கு வந்தவர்களை உத்வேகப்படுத்துவதாய் அமைந்தது.

கவிதைகள் பற்றி அடுத்த பதிவில்....

(தொடரும்)

No comments:

Post a Comment

You can leave your comments or simply sign here.