21 February 2016

தொட்டிச்செடிகள் - potted plants

தொட்டிச்செடிகள்
வெயிலுக்கு பயந்து தினமும் நம் பலகணியின்நிழலில்
 கூடலை தேடிக்கொண்டன அந்த ஜோடிப் புறாக்கள்
பிடிவாதமாய் மல்லிகை தொட்டிகளை நடுவில் குடைந்து
மெதுவாய் கட்டுகின்றன எளிய கூடு ஒன்றை.
குட்டிப்புறாக்களின் வரவை எதிர்நோக்கும் உன்
கண்களில் மீண்டும் ஒளிரும் ஒரு கண்ணாடி பளபளப்பு.
புறாவுடனான் எனது சண்டைகளை உணராத அதிவேக ஜொலிப்பு அது.
அடுக்கு மல்லிகை தொட்டிகளில் படுத்துக்கொள்வது
எல்லாவிடத்திலும் இறக்கைகளை விட்டு செல்வது
சின்ன மொட்டுகளை நோண்டுவது, எச்சமிடுவது என்று
புறாக்களினால் தொல்லைகள் பலவகை, அறியமாட்டாய் நீ.
உனக்காகவும் காதலுக்காகவும் விட்டு வைத்த
புறா ஜோடியோ இடத்தை காலி செய்வதாயில்லை
சில காக்கைகளையும் இன்று விருந்துக்கு அழைக்கின்றன.
எங்களின் சண்டையெல்லாம் சரவெடிகளாய் நீளுகின்றன
புறாகாற்றை சுவாசித்த மல்லிகை செடிகளும் இப்போதெல்லாம்
இடப்பகிர்வை நினைத்து செல்லம்கொஞ்சுவதில்லை.

No comments:

Post a Comment

You can leave your comments or simply sign here.